Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜனவரி 06 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணைப் பிரதேசத்தில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த ஒரு தொகுதி மக்களுக்கு உணவு சமைப்பதற்குரிய ஏற்பாடுகளை பிரதேச செயலகம் நேற்று புதன்கிழமை செய்து கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதன்போது பிரதேச செயலகம் உணவுக்கான பொருட்களைப் பெற்றுக் கொடுக்க, இடம்பெயர்ந்த மக்கள் - அவர்களுக்கான உணவினை தாங்களே ஒன்றிணைந்து சமைத்தனர்.
இப்பிரதேசத்தில் சுமார் 400 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளபோதும், சுமார் 50 குடும்பத்தவர்கள் அப்பகுதியிலுள்ள பல்தேவைக் கட்டிடம் ஒன்றில் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர்.
ஏனையவர்களுக்கு தங்குவதற்கான இடங்கள் இல்லாத காரணத்தால் தற்போது அவர்கள் தமது வீடுகளிலேயே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர்களுக்கும் சமைத்த உணவு வழங்கப்படும் என்று அப்பிரதேசத்தின் கிராம சேவை உத்தியோகத்தர் தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலாளர் முஸ்லிம் பிரிவில் - மக்கள் வெள்ளத்தால் ஒரு வாரத்துக்கு முன்பே பாதிக்கப்பட்டிருந்தபோதும், இன்றைய தினம்தான் அவர்களுக்கான உணவு வழங்கப்பட்டது.
புதன்கிழமை முதல் நாளை வெள்ளி வரையான மூன்று நாட்களுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்காக இவ்வாறு உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago