Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 07 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த அடை மழையால் ஆலையடிவேம்பு பிரதேச மரக்கறிச்செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் நஷ்டஈடு வழங்கவேண்டுமென ஆலையடிவேம்பு பயிர்ச்செய்கை உற்பத்தி விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
31 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் உள்ளூர் மரக்கறி பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வரும் இவ்விவசாயிகள், இவ்வாறான இயற்கை அனர்த்தங்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும் ஆலையடிவேம்பு பயிர்ச்செய்கை உற்பத்தி விவசாயிகள் சங்கம் தெரிவித்தது. ஆனாலும், மரக்கறிச்செய்கை பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசாங்கத்தால் நஷ்டஈடோ அல்லது நிவாரணமோ இதுவரையில் வழங்கப்படவில்லையெனவும் அச்சங்கம் குறிப்பிட்டது.
கடந்த டிசம்பர் மாத இறுதிப் பகுதியில் ஆரம்பித்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் மழை வெள்ளத்தால் பயிர்செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பாதிப்புக்கள் தொடர்பாக பிரதேச செயலகம் கமநலசேவை திணைக்களங்களிடம் தெரிவித்தபோதும், அவர்கள் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
எனவே, விவசாயத்தை நம்பி வாழும் இவ்விவசாயிகளுக்கு அரசாங்கம்; நஷ்டஈடு வழங்கவேண்டுமென ஆலையடிவேம்பு பயிர்ச்செய்கை உற்பத்தி விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் உரிய அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களிடம் முறைப்பாடு செய்துள்ளதாக ஆலையடிவேம்பு பயிர்செய்கை உற்பத்தி விவசாயிகள் சங்க தலைவர் த.தர்மலிங்கம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .