2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் ஆங்கில பாடத்தில் எவரும் சித்தியடையமை குறித்து வியப்பு

Super User   / 2011 ஜனவரி 07 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கடந்த மாதம் வெளியான க.பொ.த (உ/த) பரீட்சையில்  கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய 14 மாணவர்களும் ஆங்கில பாடத்தில் சித்தியடையவில்லை.

எனினும் குறித்த மாணவிகள் பொது ஆங்கில பாடத்தில் சித்தியடைந்துள்ள நிலையில் அவர்களில் இரு மாணவிகள் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி 14 மாணவிகளும் ஏனைய பாடங்களான அளவையியல், அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளியல் பாடங்களில் சித்தியடைந்துள்ளனர்.

ஆங்கில பாடத்தில் மாத்திரம் இவர்களில் ஒருவரும் சித்தியடையாமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கில பாடத்தில் சித்தியடைய தவறியமையினால் குறித்த 14 மாணவிகளும் க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடையவில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இப்பரீட்சையில் இரு ஏ சித்திகளை பெற்ற போதும் ஆங்கில பாடத்தில் சித்தியடைய தவறியமையினால் தற்போது இக்கட்டானதொரு நிலைமைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாக மாணவியொருவர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இதேவேளை, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் தமிழ் மொழி மூலம் ஆங்கில இலக்கிய பாடத்திற்கு தோற்றிய மாணவியொருவர் எஸ் தர சித்தியை பெற்றுள்ளார்.

இது தொடர்பாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட்டை தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்டு வினவிய போது,

"இந்த மாணவிளின் வினாத்தாள்களை மீள்திருத்தம் செய்வதற்காக விண்ணப்பித்துள்ளளோம். அதன் பின்னரே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக" அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்கவை தமிழ்மிரர் இணையத்தளம் தொடர்பு கொண்டு வினவிய போது,

குறித்த பாடசாலையிலிருந்து தனக்கு இதுவரை எந்த முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

குறித்த மாணவர்கள் மீள் திருத்தத்திற்காக விண்ணப்பிப்பதுடன் குறித்த பாடசாலையின் அதிபாரல் மாணவர்களின் விபரங்கள் அடங்கிய கடிதமொன்றை தனக்கு அனுப்பலாம் என அவர் தெரிவித்தார்.

"அத்துடன் எந்தவிதமான முறைப்பாடுகளுமின்றி தன்னால் எந்தவித நடவடிக்ககையும் எடுக்க முடியாது" எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0

  • Nakeel Saturday, 08 January 2011 02:39 AM

    வருந்துகிறேன். உங்கள் செய்தியில் குறிப்பிட்டது போலன்றி அட்டாளைச்சேனை மத்திய மஹா வித்தியாலயத்தில் இருந்து தமிழ் மொழி மூலம் ஆங்கில இலக்கியத்தை ஒரு பாடமாக தொடரவில்லை. அது அக்கரைப்பற்று முஸ்லிம் சென்ட்ரல் காலேஜ் இல் இருந்தே ஒரு மாணவி ஏனைய பாடங்கள் இரண்டையும் தமிழில் தோற்றி ஆங்கில இலக்கியத்தை ஒருபாடமாக தோற்றி அப்பாடத்தில் எஸ் தரத்திலான சித்தியைப் பெற்றுள்ளார். நன்றி. அக்கரைப்பற்று மத்திய கல்லூரியிலிருந்து நகில் ஆசிரியர்

    Reply : 0       0

    firzana Sunday, 09 January 2011 11:03 PM

    நான் ஒரு பல்கலைக்கழக மாணவி என்ற வகையில் நான் இது குறித்து மிகவும் வருந்துகிறேன். இது குறித்து பரிட்சை ஆணையாளர் கவனத்தில் எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.இது மாணவர்களின் எதிர்காலம் என்பதை கவனத்தில் கொள்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X