2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை மாணவனை காணவில்லை பொலிஸில் முறைப்பாடு

Super User   / 2011 ஜனவரி 08 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

திருக்கோவில், விநாயகபுர பிரதேசத்தில் 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல்  காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பிலவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விநாயகபுரம் காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த 15 வயதான ஜெயசீலன் ஜெகன் என்பவரே கடந்த 2ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு பாடசாலையை துப்பரவு செய்ய என வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பாததையடுத்து 4ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணமல் போன மாணவன் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X