Suganthini Ratnam / 2011 ஜனவரி 14 , மு.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சி.அன்சார்)
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக பெரும்போகத்தில் செய்கை பண்ணப்பட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்காணிகள் முற்றாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, மல்வத்தை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, காரைதீவு, மத்தியமுகாம், சவளக்கடை, பாலமுனை, திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவூர் மற்றும் இறக்காமம் ஆகிய கமநல சேவை மத்திய நிலையங்களுக்குட்பட்ட வயல் நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடையும் நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நெற்பயிர்கள் குடலைப் பருவத்தில் உள்ளதால் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் அனைத்து நெற்பயிர்களும் அழிவடைவதுடன், விவசாயிகள் பாரிய நஷ்டத்தையும் எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
.jpg)
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025