2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விஞ்ஞான பாடத்திற்கான செயன்முறை முகாம்

Suganthini Ratnam   / 2011 மே 15 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

காரைதீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 5ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் விஞ்ஞானப் பாடத்திற்கான செயன்முறை அறிவினை விருத்தி செய்யும் நோக்கில் கல்முனை கல்வி வலய ஆரம்பப் பிரிவு கல்வி அபிவிருத்திப் பிரிவு மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் செயன்முறை முகாமொன்றினை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஒழுங்கு செய்தது.

கல்முனை வலய ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட். ஏ.நதீர் மௌலவி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை வலய விஞ்ஞான பாடத்திற்கான உதவி கல்விப்பணிப்பாளர் ஏ. அலியார், சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய விஞ்ஞான பாட ஆசிரியர் ஏ.ஆர்.எம்.நளீம், சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய விஞ்ஞான பாட ஆசிரியர் எம்.ஏ.எஸ்.இஸ்திகார் மற்றும் மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நளீர்  கலந்து கொண்டனர்.

இச்செயன்முறை முகாமில் காரைதீவு கோட்டத்திற்குட்பட்ட காரைதீவு கண்ணகி வித்தியாலயம், காரைதீவு ஆர்.கே.எம்.ஆண்கள் வித்தியாலயம் மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயம் மற்றும் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டனர்


  Comments - 0

  • Thariq Niyas Sunday, 15 May 2011 11:09 PM

    ஒரு சிறந்த வேலைத் திட்டம்.... இவ்வாறான வேலைத் திட்டங்கள் மாணவர்களை ஊக்குவிக்கும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .