Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 மே 30 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் கலாசார தினவிழா இன்று திங்கட்கிழமை காலை கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம்.சஹாப்தீன் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம். குணசேகர பிரதம அதிதியாகவும், கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் கே.முஹம்மட் தம்பி கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இன்றைய கலாசார விழாவில் - மாணவர்கள் தமது கலை கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதம அதிதி மற்றும் அதிதிகள் பரிசில்களை வழங்கி வைத்தனர்.
கல்வியமைச்சின் செயலாளர் குணசேகர – தமது வருகையின் ஞாபகமாக பாடசாலை வளாகத்தில் மரக்கன்றொன்றை நட்டு வைத்தார். இவ்விழாவில் - பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் மேற்படி கலாசார தினவிழா – ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
6 hours ago
8 hours ago
Irshadh Tuesday, 31 May 2011 03:16 PM
பாடசாலை நாட்கள் நினைவுக்கு வருகிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago