2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 01 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர்  இடைநிறுத்தி வைக்கப்பட்டமையை கண்டித்து அப்பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை காலை முதல் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தபோது, மேற்படி இரு மாணவர்களும் கூக்குரலிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே 3 மாதத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இடைநிறுத்தப்பட்ட மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் பல்கலைக்கழக உப வேந்தருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார்.

இந்த பேச்சுவாத்தை வெற்றியளிக்காத பட்டசத்தில் வகுப்பு பகிஷ்கரிப்பு தொடரும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .