2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தென்கிழக்கு பல்கலை மாணவர் பகிஷ்கரிப்பு முடிவு

Kogilavani   / 2011 ஜூன் 02 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தமது வகுப்புப் பகிஷ்கரிப்பினைக் கைவிட்டுள்ளதாக  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தரப்பினர் தெரிவித்தனர்

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது, எதிர்ப்புக் கூச்சலிட்ட குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்களை நிர்வாகத்தினர் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தி வைத்தமையைக் கண்டித்து மேற்படி வகுப்புப் பகிஷ்கரிப்பினை நேற்று புதன்கிழமை மாணவர்கள ஆரம்பித்தனர்.

இந் நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலை மாணவப் பிரதிநிதிகள் இன்று சந்தித்தமையையடுத்து தமது பகிஷ்கரிப்பினை  கைவிட்டுள்ளதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு மாணர்கள் மீதான விசாரணையை எதிர்வரும் 10 நாட்களுக்குள் மேற்கொள்வதென துணைவேந்தர் வழங்கிய உறுதி மொழியினையடுத்தே மாணவர்கள் தமது வகுப்புப் பகிஷ்கரிப்பை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிய வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .