Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜூன் 05 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவின மாணவர்களின் ஆங்கிலமொழி பேச்சுத்திறனை அதிகரிக்கும் நோக்கில் அப்பயிற்சிநெறிக்கான முழுத்தொகையையும் வழங்க திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிம் முன்வந்துள்ளார்.
ஐ.ஐ.பி.எம் நிறுவனம் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மாணவர்களின் ஆங்கிலமொழி பேச்சுத்திறனை அதிகரிக்கும் நோக்கில் மூன்று மாத பயிற்சிநெறியொன்றை ஆரம்பித்துள்ளது. இப்பயிற்சிநெறிக்கான கட்டனமாக மாணவர் ஒருவரிடமிருந்து 31,212 ரூபா அறவிடப்படுகின்றது. இந்த நிலையில், ஆங்கிலமொழி பேச்சுத்திறனை பயிலுவதற்கு சுமார் 75 மாணவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிமினால் செலுத்தப்பட்ட பணத்திற்கான பற்றுச்சீட்டுக்களை வழங்கும் வைபவம் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
சாய்ந்தமருது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஸஹ்பி எச்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிம் பிரதம அதிதியாகவும் ஐ.ஐ.பி.எம். நிறுவனத்தின் பிரதி பொதுமுகாமையாளர் றிப்தி முஹம்மட் கௌரவ அதிதியாகவும் நிந்தவூர் பிரதேச சபையின் உதவி தவிசாளர் எம்.அன்ஸார், கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் அதிபர் எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
7 hours ago
16 Aug 2025
16 Aug 2025
Nintavuran Sunday, 05 June 2011 03:36 PM
நிந்தவூரில் ஒரு பல்கலைகழக ஒன்றியம் ஒன்றை இயக்க எம்பியால் முடியவில்லையா . இரண்டு எம்பிக்கள் இருக்குகிறாங்களே. ஒரு இயக்கமோ அல்லது ஒரு கவர்மென்ட் அமைப்போ அவர்கள் கீழ் இருக்கிறதா? சிந்தியுங்கள் நிந்தவூர் மக்களே.
Reply : 0 0
radan Tuesday, 07 June 2011 03:52 AM
இது என்ன புது விளையாட்டு? ஏன் 31212 ரூபா. vat சேர்த்தா? machine மூலம் படிப்பு.
Reply : 0 0
awh Sunday, 12 June 2011 08:15 AM
Namma MP kku mudalla English Padichi kudungappaa........
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
16 Aug 2025
16 Aug 2025