Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 05 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைககளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன ஆகிய இருவரும் ஒருமித்து செயற்படுவதற்கு இணக்கம் கண்டுள்ளனர்.
முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சரின் மட்டக்களப்பு இல்லத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்து முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்துரையாடியதோடு, கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றமானது அம்பாறை மாவட்டத்தில் ஏற்படுத்தவுள்ள சாதக பாதகங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தாண்யடி பகுதியியில் 15 வருடங்களுக்கும் மேலாகத் திறக்கப்படாமலுள்ள அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தின் அவலநிலை குறித்து இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து – குறித்த கட்டிடத்தை மிக விரைவில் திறப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதென முதலமைச்சர் சந்திரகாந்தன் உறுதியளித்தார்.
இதேவேளை, திராய்க்கேணி, அலிக்கம்பை கிராமம், திருக்கோவில் மற்றும் காரைதீவு ஆகிய பகுதிகளின் குறைபாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் குறித்தும் முதலமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் விபரித்தார்.
அத்துடன் காரைதீவு மற்றும் திருக்கோவில் வைத்தியசாலைகளின் குறைபாடுகளை முடிந்தளவு நிறைவேற்றித் தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவிடம் முதலமைச்சர் சந்திரகாந்தன் உறுதியளித்தார்.
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago