2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பொத்துவில் அல்/இஸ்ராக் வித்தியாலயத்தின் பிரதான மண்டபம் சேதம்

Kogilavani   / 2011 ஜூன் 06 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)
பொத்துவில் அல்/இஸ்ராக் வித்தியாலயத்தின்  பிரதான மண்டபமானது சேதமடைந்துக் காணப்படுவதால் மாணவர்களின் புற விருத்தித் திறன்களை வெளிப்படுத்தமுடியாமல் இருப்பதாக அப்பாடசாலையின் அதிபரும் ஆசிரியர்களும் கவலைத் தெரிவிக்கின்றனர்.

1992ஆம் ஆண்டளவில் முன்னால் அமைச்சரான ஏர்.ஆர்.எம்.மன்சூரின் நிதி ஒதுக்கீட்டில் அமையப்பெற்ற மேற்படி மண்டபமானது சிறந்த முறையில் நிர்மாணிக்கப்படாததனால் குறுகிய காலத்திற்குள் சேதமடைந்துள்ளதாக இப்பாடசாலைச் சூழலில் வசிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.

பாடசாலைக் கூட்டங்கள், கலை நிகழ்வுகள் என்பவற்றை மேற்கொள்வதற்கு இப்பாடசாலைக்கான பிரத்தியேக மண்டபம் எதுவும் இல்லாததால் பல்வேறு சிரமங்களை தாம் எதிர்கொள்வதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

எனவே இம் மண்டபத்தை உடனடியாக புனரமைத்துத் தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக அக்கரைப்பற்று பிராந்திய வலயக்கல்வி அலுவலகத்தின் பதில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.டீ.ஏ. தௌபீக்கிடம் கேட்டபோது,

தான் இவ்  வலயத்திற்கு பதில் கடமைக்காக நியமிக்கப்பட்டு சுமார் மூன்று மாதங்களாகியும் இதுவரை இந்த இவ்விடயம் குறித்துத் தமக்கு முறையிடப்படவில்லையென தெரிவித்தார். மேலும் இம்மண்டபம் அமைப்பது குறித்து தீர்மாணங்கள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .