2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்களை ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Menaka Mookandi   / 2011 ஜூன் 07 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவுள்ள ஆசிரியர் இடமாற்றங்களை ரத்து செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுக்கூட்டத்தின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேற்படி ஆசிரியர் இடமாற்றங்களால், எதிர்வரும் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பில்  ஜனாதிபதியின் மேலதிக கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனைக் கருத்திற்கொண்ட ஜனாதிபதி இவ்விடமாற்றங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .