2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிறார்களுக்கு பசுப்பால் வழங்க ஆலையடிவேம்பு பிரதேச சபை மறுப்பதாக தகவல்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 10 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அரசாங்கத்தினால் முன்பள்ளி சிறார்களுக்கு வழங்கப்பட்டுவரும்  இலவச பசுப்பாலை ஆலையடிவேம்பு பிரதேச
செயலகம் வழங்க மறுக்கின்றது.

சிறுவர்களின் போஷாக்கு குறைபாட்டை இல்லாதொழிக்கும் முகமாக இந்த வருடம் ஐனவரி மாதம் தொடக்கம் 9 மாதங்களுக்கு சகல முன்பள்ளி சிறார்களுக்கும்  மாதமொன்றில் 20 நாட்களுக்கு ஒரு பிள்ளைக்கு 150 ரூபா பெறுமதியான 3 லீற்றர் சுத்தமன பசுப்பாலை பிரதேச செயலகங்கள் ஊடாக சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார அமைச்சு வழங்கி வருகின்றது

ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள 26 முன்பள்ளி நிலையங்களில் 906 சிறார்கள் கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் பசுப்பால் கடந்த 6 மாதகாலமாக பிரதேச செயலகத்தினால் வழங்கப்படவில்லையென முன்பள்ளி நிர்வாகிகளும் பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர். இது சிறுவர்களின் அடிப்படை உரிமையை மீறும் சம்பவமெனவும்  முன்பள்ளி நிர்வாகிகளும்  பெற்றோர்களும் குறிப்பிட்டனர்.

திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழுள்ள  பொத்துவில், திருக்கோவில் கோட்டக்கல்வியின் கீழுள்ள முன்பள்ளிச் சிறார்களுக்கு அந்தந்த பிரதேச செயலகங்களூடாக  பசுப்பால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கோட்டக்கல்வியின் கீழுள்ள ஆலையடிவேம்பு முன்பள்ளிச் சிறார்களுக்கு  அப்பிரதேச செயலகம்  இன்று வரை பசுப்பால் வழங்கவில்லை. இது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி என்.புள்ளைநாயகத்தின் கவனத்திற்கு கொண்ட வந்துள்ளதாக வலயக் கல்வி முன்பள்ளி
சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் எஸ்.தர்மபாலன் தெரிவித்தார்

கடந்த வருடம் இதேபோன்று அரசாங்கத்தினால் 5 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மாதமொன்றிற்கு 200 ரூபா பெறுமதியான பசுப்பால் வழங்கும்  திட்டத்தில் இப்பிரதேச செயலகம் சமுர்த்தி அதிகார சபையினால் இரு தடவைகள் மாத்திரம் பக்கற்றில்
அடைக்கப்பட்ட பாலை வழங்கியது. பின்னர்  எதுவும் வழங்கப்படாமல்  அவற்றின் பணத்திற்கு என்ன நடந்ததென்று தெரியாதிருந்தது.

இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு,  சிறுவர் தேசிய பாதுகாப்புச்சபை, கல்வி அமைச்சு மற்றும் சம்மந்தப்பட்டவர்களிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக  முன்பள்ளி நிர்வாகிகளும் பெற்றோர்களும் தெரிவித்தனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .