Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜூன் 11 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் ஆழ்கடல் மீன்பிடித் தொழிழில் ஈடுபடுவோர்களின் இயந்திரப் படகுகளிலுள்ள மீன்பிடி வலைகள் மீன்பிடி நடவடிக்கைகளின் போது தொடர்ச்சியாக களவாடப்படுவது தொடர்பாக மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக இந்நிகழ்வுகள் அதிகரித்து வருவதனால் ஆழ்கடல் மீன்பிடித்தொழிலாளர்கள் தமது உடமைகளுடன் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அச்சம் அடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகின்றார்.
கடந்த வியாழக்கிழமை இரவும் இயந்திரப்படகுகளில் மீன்பிடிக்கச்சென்ற கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு படகுகளிலிருந்தும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு படகிலிருந்தும் சுமார் ரூபா ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் பெறுமதியான மீன்பிடி வலைகள் வெட்டிக் களவாடப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்த விடயம்தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் முறையீடுசெய்தும் போதிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனக் கூறும் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்கள் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.ஏ.ஹமீட், இந்தவிடயம் தொடர்ச்சியாக இடம்பெறுமாயின் இப்பிராந்தியத்தின் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகள் பாதிப்படையக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றார்.
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago