2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் வழங்கும் வைபவம்

Kogilavani   / 2011 ஜூன் 15 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் நாளை வியாழக்கிழமை காலை தென்கிழக்கு  பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற உள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் நான்கு பீடங்களைச் சேர்ந்த 176 மாணவர்கள் புலமைப்பரிசில் பெற உள்ளனர்.

2009, 2010ஆம் கல்வி ஆண்டுகளில் இம்முறை கலை கலாசார பீடத்தில் 48 மாணவர்களும், முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் 78 மாணவர்களும் பிரயோக விஞ்ஞான பீடத்தில் 16 மாணவர்களும், இஸ்லாமிய அறபு மொழி பீடத்தில் 34 மாணவர்களும் இப்புலமைப்பரிசிலை பெற தகுதி பெற்றுள்ளனர் என பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X