2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 17 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

கிழக்கு மாகாணத்தில்  முன்னெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றங்களை இரத்துச் செய்யுமாறு கோரி ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் சம்மாந்துறையில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களினால் சம்மாந்துறை ஹிஜ்ரா ஜூம்ஆப் பள்ளிவாசலிருந்து முன்னெடுக்கப்பட்ட  இந்த ஆர்ப்பாட்டமானது அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தை நோக்கி புறப்பட்டது.

எமது மாணவர்களின் மனதை சீரழிக்காதே', 'எமது ஊரிலுள்ள வெளி வலய ஆசிரியர்களை அகற்று', 'பக்கச்சார்பான இடமாற்றத்தைக் கைவிடு', 'சம்மாந்துறையின் கல்வியை பாழக்காதே', 'ஆசிரியர்களின் மனதைக் கொலை செய்யாதே' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட  சுலோக அட்டைகளை தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கு வருகை தந்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவிடம் சம்மாந்துறை வலய ஆசிரியர் சங்கத்தினால் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

இதில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், எம்.எல்.துல்சான், எஸ்.புஷ்பராசா, பிரதேச செயலாளர்,  எம்.எம்.நஸீர் ஆகியோருடன் ஆசிரியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • Junaideen Saturday, 18 June 2011 11:08 PM

    மிகவும் முக்கியமான விசயம்

    Reply : 0       0

    Ayyas Sunday, 19 June 2011 05:05 AM

    மன்சூர் சார் உங்களுக்கு நல்லது செய்ததற்கு உங்களுடைய அன்பை காட்டி விட்டீர்கள். அல்லாஹ் எல்லாவற்றுக்கும் போதுமானவன். சம்மாந்துறை அரசியல்களே.... நீங்களும் அனுபவிப்பீர்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X