2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கல்முனையிலுள்ள பாடசாலைகளுக்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சர் குழு விஜயம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 17 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்,எஸ்.மாறன்)

கிழக்கு மாகாண கல்வியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கல்முனைப் பிரதேச பாடசாலைகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர்.

ஆசிரியர்களின் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்ட இத்தருணத்தில் கல்முனை மற்றும் சம்மாந்துறை வலயப் பாடசாலைகளின் கல்வி நிலை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை நேரில் கண்டறிந்துகொள்வதற்காக மேற்படி குழுவினர் கல்முனைப் பிரதேச பாடசாலைகளுக்கான விஜயத்தை மேற்கொண்டனர்.

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயம் மற்றும் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரிகளுக்குச் சென்ற மேற்படி குழுவினர்,  ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களிடம் கள நிலைமை பற்றி கலந்துரையாடியனர். அத்துடன்,  அவர்களின் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கேட்டறிந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சர் விமல வீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.புஸ்பராஜா, துல்கர் நையின் ஆகியோர் மேற்படி குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X