2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பெரியகல்லாறு ஆற்றில் ஒருவர் பலி

A.P.Mathan   / 2011 ஜூன் 23 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை - திருக்கோவில், பெரியகளப்பு ஆற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் ஆற்றில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்த ஜெயசூரிய தெரிவித்தார்.

பெரிய களப்பு ஆற்றில் வழமைபோல தோணியில் மீன்பிடிக்க தனியாக காலையில் சென்ற திருக்கோவில் துரையப்பா வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தனரான செல்வராசா செல்வபவன் (வயது 26)இரவு 11 மணிக்கு தம்பட்டை பிரதேச ஆற்றுப்பகுபியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீன்பிடிக்க காலையில் சென்றவர் மாலைவரை வீடுதிரும்பாததையடுத்து உறவினர்கள் பொலிஸாருடன் இணைந்து பெரியகளப்பு ஆற்றில் தேடியபோது, தம்பட்டை பிரதேச ஆற்றுப்பகுதியில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதாகவும் அவ்வாறே சம்பவதினத்தில் வலிப்பு ஏற்பட்டு தோணியில் இருந்து தவறி தண்ணீரில் வீழ்ந்து மூழ்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலத்தை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.;சரவணராஐh பார்வையிட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X