Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூன் 26 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை எதிர்வரும் வருடம் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படவுள்ளமையை அடுத்து இவ் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று சனிக்கிழமை வைத்தியசாலைக் கட்டிடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைப் பணிப்பாளர் திருமதி எஸ். தர்மராஜா, வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் எம்.ஏ.நபீல், டொக்டர் ஹய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவ் வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், வைத்தியசாலைக்குத் தேவையான தளபாடங்கள் மற்றும் ஏனைய சில வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை அவ்விடத்திலே செய்துக்கொடுத்தார்.
31 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago