Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜூன் 26 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறையிலுள்ள காரைதீவு, கல்முனை ஆகிய இரு விசேட அதிரடிப்படை முகாம்கள் நாளை திங்கட்கிழமை முதல் வாபஸ்பெறப் படவுள்ளன. கடந்த 21 வருடங்களாக படையினர் வசமிருந்த இந்த முகாம்கள் நாளைமுதல் முற்றாக வாபஸ்பெறப்படவுள்ளன. அதேவேளை இவ் படைமுகாமின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் முகாமிடவுள்ளதாக காரைதீவு விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி எம்.பந்துல தெரிவித்தார்.
கடந்த உள்நாட்டு யுத்தத்தின் போது 1990ஆம் ஆண்டு அரச கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்கள், வீதி என்பன உள்ளடக்கப்பட்டு பாரிய படைமுகாமாக காரைதீவு விசேட அதிரடிப்படை முகாம் அமைக்கப்பட்டு, மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தின் கட்டளைத் தலைமைக் காரியாலயமாக இயங்கிவந்தது. இந்த படைமுகாமிலிருந்து நாளை 27ஆம் திகதி முதல் விசேட அதிரடிப் படையினர் முற்றாக வாபஸ் பெற்று வெளியேறுவதுடன் தனியார் கட்டிடங்கள் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் 21 வருடங்களாக மூடப்பட்ட வீதியை மக்கள் பாவனைக்காக திறந்து விடவுள்ளதாகவும், இம்முகாமிலிருந்து வெளியேறும் விசேட அதிரடிப்படையினர் வவுனியா மற்றும் மல்வத்தை முகாம்களுக்கு செல்லவுள்ளதாகவும் எம்.பந்துல மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கல்முனை கடற்கரைப் பிரதேசத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட விசேட அதிரடிப்படை முகாமும் நாளை முற்றாக மூடப்படவுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், அறுகம்பை, கோமாரி, அக்கரைப்பற்று, கஞ்சிக்குடிச்சாறு, காஞ்சரம்குடா, சாகாமம், வம்மியடி, திருக்கோவில் போன்ற விசேட அதிரடிப்படை முகாங்களிலிருந்து ஏற்கனவே படையினர் வெளியேறி முகாம்கள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
28 minute ago
40 minute ago
59 minute ago
1 hours ago
mam.fowz Sunday, 26 June 2011 06:25 PM
நீங்கள் போனால் இந்த ஊரில் கள்வர் தனது கை வரிசையை ஆரம்பம் செய்வர்!!
எமது நாட்டின் யுத்தம் நடக்கும் போது மக்களுடன் மரியாதையுடன் பழகியவர்
என்றாலும் பொறுப்பு பழகியவர் நீங்கள்தான் வாழ்க !!
Reply : 0 0
Naleem Sunday, 26 June 2011 08:50 PM
காரைதீவு விசேட அதிரடிப்படையினர் வெளியேறுவதானது உன்மையில் கவலையான விடயமே. மிகவும் நட்புடனும் பொறுப்புடனும் பொதுமக்களுடன் பழகியவர்கள் இவர்கள். உங்களுக்கு எமது வாழ்த்துக்கள். உங்கள் சேவை சிறப்பாக இடம்பெற்றது. இனி கள்வர்களின் கைவரிசை மேலோங்கும் என்னும் பீதி மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. உங்கள் சிறப்பான சேவைக்கு எமது இதயத்தின் ஆழத்திலிருந்தான வாழ்த்துக்களும் நனறிகளும் உரித்தாகட்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
40 minute ago
59 minute ago
1 hours ago