2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாயல் புனரமைப்பிற்கான நிதி அன்பளிப்பு

Kogilavani   / 2011 ஜூன் 26 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாயலின் (சின்னப் பள்ளிவாயல்) புனரமைப்பிற்கான ஒரு தொகுதி நிதியை அம்பாறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தனது சொந்த நிதியிலிருந்து அன்பளிப்பாக வழங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமை, மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் இன்று ஞாயிற்றுக்கிழமையன்று அவரின் இல்லத்தில் சந்தித்துபோதே மேற்படி நிதித் தொகையை அவர் வழங்கினார்.

இதன்போது, பள்ளிவாயல் நிர்வாகத்தினர் - நாடாளுமன்ற உறுப்பினருக்கு தமது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டதோடு, மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலுக்கு அவர் தொடர்ச்சியாக வழங்கிவரும் நிதி மற்றும் பொருளாதாரப் பங்களிப்புகளையும் நினைவு கூர்ந்தனர்.

இதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து குறித்த பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கித் தொகுதியொன்றைப் பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • mam.fowz Monday, 27 June 2011 10:18 AM

    மாஷா அல்லாஹ் !!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X