2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மாடுகள் மீட்பு; இருவர் சந்தேகத்தில் கைது

Menaka Mookandi   / 2011 ஜூன் 27 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா) 

சட்ட விரோதமான முறையில் மாடுகளை ஏற்றிச்சென்ற லொறியொன்றினை மகாஓயா பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளனர். மகாஓயா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கட்டாக்காலியாக திரியும் மாடுகளைப் பிடித்து பதுளை மற்றும் நுவரெலியா பிரதேசங்களுக்கு கடத்தி செல்லும் வழியிலேயே இந்த லொறி சோதனையிடப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 20 மாடுகள் மிகவும் நெருக்கமான முறையில் மேற்படி லொறியில் அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கிப்படுகின்றது. சம்பவத்தின் பொது மேற்படி லொறியின் சாரதியும் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மகாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X