Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஜூன் 27 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் இன்று மூடப்படுவதையொட்டி, காலை முதல் முகாமிலுள்ள பொருட்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு வருகின்றன.
இதேவேளை, காரைதீவு அதிரடிப்படை முகாமும் இன்றைய தினம் மூடப்படுவதாக முகாமின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
காரைதீவு மற்றும் கல்முனை ஆகிய இரண்டு அதிரடிப்படை முகாம்களும் ஒரே பொறுப்பதிகாரியினுடைய நிருவாகத்தின் கீழ் இயங்கி வந்தன.
யுத்தம் நிலவிய 1990ஆம் ஆண்டு காலகட்டத்தின் போது காரைதீவு விசேட அதிரடிப்படை முகாமும் அதன் பின்னர் கல்முனை முகாமும் நிறுவப்பட்டன.
அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதியில் இயங்கி வந்த பல அதிரடிப்படை முகாம்கள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையிலேயே தற்போது கல்முனை மற்றும் காரைதீவு முகாம்களும் மூடப்படுகிறது.
கல்முனையில் விசேட அதிரடிப்படையினர் தங்கியிருந்த கட்டிடம் பழைய அஞ்சல் அலுவலகமாகும்.
அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதியில் தற்போது – விசேட அதிரடிப்படை முகாம்கள் எதுவும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
29 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago
risath Tuesday, 28 June 2011 02:56 PM
மீண்டும் பழையது போல் கடத்தலும் ,கொள்ளையும் தலை தூக்கும் இவர்கள் இல்லாவிட்டால் ,இவர்கள் வெளியேறுவது கவலையான விடயம்தான்.
Reply : 0 0
riyas Tuesday, 28 June 2011 03:41 PM
போனால் போகட்டும் போடா இந்த பூமயில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா..
Reply : 0 0
Mohd rizvi -Qatar Tuesday, 28 June 2011 03:53 PM
தங்களின் மேலான சேவைக்கு வாழ்த்துக்கள். இருந்தாலும் கல்முனை பிரதேசத்திற்கு பாதுகாப்பு கொஞ்சம் குறைந்து விட்டதுதான். கள்வர்கள் தொல்லை அராஜகம் இது போன்ற நடவடிக்கைகள் அதிகரிக்குமோ என்ற பயம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது.
Reply : 0 0
Nafar Thursday, 30 June 2011 04:38 PM
உண்மைதான் இனி கள்வர்களின் அட்டகாசம் ஆரம்பமாக போகிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago