2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

முயலை துன்புறுத்திக் கொன்றவர்கள் கைது

Kogilavani   / 2011 ஜூன் 27 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
அம்பாறை சொறிக்கல்முனை பிரதேசத்தில் காட்டு முயல் ஒன்றை வலையினால் பிடித்து சித்திரவதை செய்து கொன்ற இருவரை கைது செய்துள்ளதாக சவளைக்கடை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எம்.ஏ.பசீர் தெரிவித்தார்.

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 38 ,42 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் முயலொன்றை வலையொன்றினூடாக பிடித்து அடித்து கொன்றுள்ளதுடன் கரிசமைத்து உண்பதற்கு முயன்றுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்படி இரு நபரையும் கைது செய்துள்ளதுடன் முயலைக் கொள்வதற்காக பயன்படுத்திய வலை மற்றும் தடி  போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0

  • jathees KANTHASAMY Thursday, 30 June 2011 01:12 AM

    கொய்யாலே, மனிசன கொல்லுற நாட்டுல தானே இதெல்லாம் நடக்குது? என்ன கொடும சரவணா!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X