Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூலை 01 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம். ஹாசிம் தாக்கப்பட்டமையை கண்டித்து அக்கரைப்பற்று கல்வி கோட்டத்திலுள்ள சுமார் 20 பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று வெள்ளிக்கிழமை பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் மீது கிண்ணியா பிரதேச சபை தவிசாளரும் அவரின் குழுவினரும் சில தினங்களுக்கு முன்னர் தாக்குதலொன்றினை மேற்கொண்டனர்.
இதில் பாதிக்கப்பட்ட வலய கல்வி பணிப்பாளர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையிலேயே, மேற்படி சம்பவத்துக்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் இன்றைய தினம் அக்கரைப்பற்று கோட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் சமூகளிக்காமல் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கிண்ணியா வலய கல்வி பணிப்பாளர் ஹாசிம் முன்னர் அக்கரைப்பற்று வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
39 minute ago
58 minute ago
1 hours ago
IBNU ABOO Friday, 01 July 2011 06:41 PM
கல்விப் பணிப்பாளர் ஹாசிம் மிகச்சிறந்த கல்வி நிர்வாகி. அவர் பணிபுரிந்த பகுதிகளில் கல்விவளர்ச்சி கண்டது .
Reply : 0 0
kumar Friday, 01 July 2011 08:20 PM
சரியான நேரத்தில் மக்கள் சரியான முடிவெடுத்திருக்கிறார்கள் போலும். பிழையான நேரத்தில் ஹாஸிம் சரியான முடிவெடுத்திருக்கலாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
39 minute ago
58 minute ago
1 hours ago