2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண நீர் வழங்கல் விஸ்தரிப்பு செயற்திட்ட முகாமைத்துவ அலுவலகம் திறப்பு

Menaka Mookandi   / 2011 ஜூலை 01 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

கிழக்கு மாகாண நீர் வழங்கல் விஸ்தரிப்பு செயற்திட்டத்தின் முகாமைத்துவ அலுவலக திறப்பு விழா இன்று காலை அம்பாறை, உகன வீதியில் கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் டபிள்யூ.ஜீ.ஏ.நந்தசிரி தலைமையில் இடம்பெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், பி.எச்.பியசேன, சிறியாணி விஜேவிக்ரம மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சாந்த பிரேமரத்ன ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தினை திறந்து வைத்தனர்.

மேலும் மதத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X