2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மு.கா. கிழக்கு மாகாணசபையில் திவிநெகும சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கவேண்டும்: ஐ.தே.க. சம்மாந்துறை

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

13ஆவது அரசியல் திருத்தச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துமாறு கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபையில் திவிநெகும சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்கவேண்டும். இவ்வாறு இல்லாமல் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் சிறுபான்மையினருக்குச் செய்யும் ஒரு அநீதியான செயலாகும்  என ஜக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி தெரிவித்தார்.

அரசாங்கம் திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக மாகாணசபைகளின் அங்கீகாரத்தை பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை கண்டித்து நேற்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'சிறுபான்மையினருக்கு 13ஆவது அரசியல் திருத்தச் சட்டமூலம் அதிகாரப்பகிர்வு பற்றி அரசும் சர்வதேசமும் பேசிக்கொண்டிருக்கையில் மாகாணசபைகளுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தை அரசு ஒருதலைப்பட்சமாக குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்த 13ஆவது திருத்தச் சட்டமூலம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பான அதிகாரங்களை மாகாணசபையில் இருந்து முற்றாக மத்திய அரசின் கீழ் கொண்டுவந்து, இந்த அபிவிருத்தி தொடர்பான முழுப் பொறுப்பையும் வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு என்ற திட்டமே இந்த திவிநெகும சட்டமூலமாகும்.  இந்த சட்டமூலத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தால் சிறுபான்மையினருக்கு செய்கின்ற ஒரு அநீதியாகும்

எனவே, இந்த சட்டமூலத்தை கருத்தில் கொண்டு  கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்து வாக்களிக்கவேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X