2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பஸ் நடத்துனரின் மறைவிற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் துக்கம் அனுஷ்டிப்பு

Super User   / 2012 நவம்பர் 22 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
 
ஒலுவில் பிரதான வீதியின்  எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பஸ் நடத்துனரான கணேசமூர்த்தியின் மறைவையிட்டு அம்பாறை மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் அனைவரும் இன்று வியாழக்கிழமை பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடாமல் துக்கம் அனுஷ்டித்தனர்.
 
அத்துடன் தனியார் பயணிகள் பஸ்கள் எதுவும் போக்குவரத்தில் ஈடுபடாது வெள்ளைக் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட துக்க அனுஷ்டிப்பில் அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்களும் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்ட பயணிகள் போக்கவரத்தில் தனியார் பஸ்கள் எதுவும் ஈடுபடாததன் காரணமாக பயணிகள் போக்குவரத்துக்களை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கினர்.



  Comments - 0

  • RAJAH Friday, 23 November 2012 03:23 PM

    இன ஒற்றுமைக்கு நல்ல நிகழ்வு….அனைவரும் இதனை பின்பற்றவேண்டும்.
    ராஜா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X