2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சம்மாந்துறை ஜலாலியா ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்மாணப் பணிக்கு நிதி வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 25 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)


சம்மாந்துறை ஜலாலியா ஜூம்ஆ பள்ளிவாசலின் கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக நிதி வழங்கும் வைபவம் ஜலாலியா ஜூம்ஆ  பள்ளிவாசலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

ஜலாலியா ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளர் எம்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட சவுதி அரேபிய தூதுவராலயத்தின் பொதுசனத்தொடர்பு அதிகாரி ஐ.எல்.எம்.மாஹிர்  பள்ளிவாசலின் கட்டிட நிதிக்காக சவுதி அரேபிய நாட்டு தனவந்தவரினால் பெறப்பட்ட 20 இலட்சம் ரூபாவிற்கான காசோலையை பள்ளிவாசல் நிர்வாகசபைத் தலைவரிடம் வழங்கினார்.

இதில் சம்மாந்துறை பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.அப்துல் ஜப்பார், உலமாக்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X