2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பீச் பார்க் பூங்கா நிர்மாண பணிகளை கல்முனை மேயர் பார்வை

Super User   / 2012 நவம்பர் 25 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருதில் அமைக்கப்பட்டு வருகின்ற பீச் பார்க்கினை மேயர் சிராஸ் மீராசாஹிப் நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது குறித்த வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தினை ஆராய்ந்ததுட் விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பீச் பாக்கினை விஸ்தரிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. விஸ்தரிப்புக்கு தேவையான காணி அண்மித்த பகுதியில் காணப்படுவதால் அவற்றினை பயன்படுத்தி விஸ்தரிப்பதற்கான பட வரைபினை மேற்கொள்ளுமாறும் மேயர் அதிகாரிகளுக்கு பணித்தார்.

மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி மற்றும் கணக்காளர் எல்.ரீ.சாலிதீக் ஆகியோர் இதன்போது மேயருடன் பிரசன்னமாகியிருந்தனர். இதேவேளை, சாய்நதமருது,  பொலிவேரியன் கிராமத்தில் தெரு மின் விளக்குகள் ஔிராமல் இருப்பதனை கடந்த வெள்ளிக்கிழமை இரவு கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் நேரில்  சென்று பார்வையிட்டார்.

இதன்போது ஒளிராத தெரு மின் விளக்குகளுக்கு பதிலாக புதிய மின் குமிழ்களை பொருத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார். பொலிவேரியன் கிராம மக்கள் இரவு வேளையில் இருள்களுக்கு மத்தியில் பயணம் செய்வதில் பெரும்  அசௌகரியங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0

  • billa Monday, 26 November 2012 06:38 PM

    நடக்குமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X