2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் நடமாடும் சேவை

Super User   / 2012 நவம்பர் 25 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசனம்; வீடமைப்பு நிர்மாணம் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நடமாடும் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை  அக்கரைப்பற்று பிரதேச சபைக் கட்டிடத்தில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாஸிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்துகொண்டு அக்கறைப்பற்று பள்ளிகுடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஹிலுர் நகர், ஆலிம்சேனை, இலுக்குசேனை, பள்ளிக்குடியிருப்பு, இசங்கனிசீமை பிரதேசங்களுக்குரிய வீதிகள், மின்சாரம், வீடமைப்பு, நீர் வளங்கள், விவசாய வீதிகள், கல்வி மற்றும் பள்ளிவாசல் அபிவிருத்தி சம்மந்தமான பல பிரச்சினைகள் ஆராய்ந்தார்.

அத்துடன் பல பிரச்சினைகள் அவ்விடத்திலே தீர்த்து வைக்கப்பட்டதுடன் மேலும் சில பிரச்சினைகள்; முன்வைக்கப்பட்டு அவை பட்டியல் படுத்தப்பட்டள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0

  • mim ashraff Sunday, 25 November 2012 06:30 PM

    சேவை தொரட்டும் மக்கள் பயன்பெறட்டும் நன்றி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X