2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மின்சார கம்பி வேலிகளை அமைக்க மாகாண அமைச்சர் உதுமாலெப்பை உத்தரவு

Super User   / 2012 நவம்பர் 28 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


அம்பாறை மாவட்டத்தில் யானைகளின் தொல்லைகளிருந்து மக்களை பாதுகாப்பதற்காக சுமார் 14 கிலோ மீற்றருக்கு மின்சார கம்பி வேலிகளை அமைக்குமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை உத்தரவிட்டுள்ளார்.

மாகாண அமைச்சர் உதுமாலெப்பை தலைமையிலான குழுவினர் யானைகளின் தொல்லைகளினால் பாதிக்கப்பட்ட ஒலுவில், ஆலிம்சேனை, பாலமுனை, பறடாக் குளம், ஆளம்குளம், சம்புநகர் மற்றும் தீகவாபி போன்ற கிராமங்களுக்கே நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போதே, யானைகளினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் கலந்தாலோசித்தனர். சுமார் 14 கிலோ மீற்றருக்கு யானைகளின் வருகையினை தடுப்பதற்காக மின்சார கம்பி வேலிகளை அமைப்பதற்கான பணிப்புரைகளை அதிகாரிகளுக்கு இதன்போது மாகாண அமைச்சர் வழங்கினார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா, அம்பாறை மாவட்ட வன விலங்கு பாதுகாப்பு உதவி காட்டிலாகாதிகாரி டபிள்யூ. கீத்ஸ்ரீ மெவான், காட்டிலாகாதிகாரி ஏ.எம். தர்மதாச, ஒலுவில் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.ஏ. இஸ்மாயில் மற்றும் விவசாய பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.




  Comments - 0

  • நல்லவன் Wednesday, 28 November 2012 12:35 PM

    நீர் ஒரு முன்மாதிரி அமைச்சர்.

    Reply : 0       0

    aboo Friday, 30 November 2012 02:58 AM

    அல்ஹம்துலில்லாஹ்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X