2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ஆற்றில் நீராடிய ஆசிரியரை காணவில்லை

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 09 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.மாறன்,ஏ.ஜே.எம்.ஹனீபா  

நிந்தவூர் அட்டைப்பள்ளம் சிங்காரபுரி சுமைதாங்கி பாலத்தின் கீழாகவுள்ள ஆற்றில்  நீராடிய ஆசிரியரொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.

கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த நிந்தவூர் அட்டப்பள்ளம் முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் வெள்ளைக்குட்டி கனகரட்ணம் (வயது 48) என்பவரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாடசாலையிலிருந்து திராய்க்கேணியிலுள்ள தனது சகோதரர் வீட்டுக்குச் செல்லும் வழியிலுள்ள அட்டைப்பள்ளம் சிங்காரபுரி சுமைதாங்கி பாலத்தின் கீழுள்ள ஆற்றில்  நீராடியபோதே  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவதினம் மழை வெள்ளம் காரணமாக ஆற்றில் அதிகளவிலான நீர் பாய்ந்து சென்றமையால் இவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரும் உறவினரும் தோணியில் சென்று இவரைத் தேடி வருகின்றனர்.

இது தொடர்பான விசாரணையை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X