2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சவப்பெட்டி கடைக்கு தீ வைப்பு

Super User   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச  சவப்பெட்டிக்கடை தீயினால் எரிந்து சாம்பலாகிய சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்

ஆலையடிவேம்பு சாகாம வீதியில் தகரத்தால் கட்டப்பட்ட  சவப் பெட்டிக்கடை இன்று அதிகாலை வேளையில் இனம் தெரியாதேரினால் தீயிடப்பட்டுள்ளது. இதனால் கடையில் இருந்த சவப்பெட்டியுடன் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை இந்த சவப் பெட்டி கடைக்கு அருகில் இருந்த மரக்கறி பெட்டிக் கடையொன்றும் கடந்த மாதம் இனந்தெரியாதேரினால் தீயிட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X