2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற சாரதிக்கு சிறை

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அனுமதிப்பத்திரமின்றி லொறியில் மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற சாரதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாரதிக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையுடன், 40 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவான்  எம்.எஸ்.பிரிங்கி தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன், குறித்த லொறியை தடுத்துவைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஹிங்குராணையில் இருந்து வரிப்பொத்தான்சேனை பிரதேசத்துக்கு அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக லொறியில் மரக்குற்றிகளை  எடுத்துச்சென்ற நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

வரிப்பொத்தான்சேனை பிரதேசத்தில் வீதியில் வைத்தே தமண பொலிஸார் 54 வயதுடைய ஒருவரை கைதுசெய்ததுடன், மரக்குற்றிகள் அடங்கிய லொறியையும் கைப்பற்றி;  இவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்  தாக்கல் செய்தனர்.

பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவருக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .