2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தீயினால் வீடு எரிந்து நாசம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 21 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீடும், வீட்டிலிருந்த பொருட்களும் தீயில் எரிந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மார்க்கட் வீதி, அட்டாளைச்சேனை 03 ஆம் பிரிவில் இச்சம்பவம் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற வேளை வீட்டில் எவரும் இருக்க வில்லை. வீட்டிலிருந்து புகை மண்டலம் எழுந்ததைக் கண்ட பக்கத்து வீட்டார் கூச்சலிட்டு மக்களை அழைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு பொது மக்களுக்கு, பொலிஸாரும் விரைந்து சென்று தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மின்சார ஒழுக்கு காரணமாகவே இச்சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரிவிக்கப் படுகின்ற அதேவேளை தீயினால் ஏற்பட்;ட சேத விபரம் பற்றிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விரிவான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .