2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிறுவன் மீது துஷ்பிரயோகம்; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 25 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜா முன்னிலையில் குறித்த சந்தேகநபரை இன்று புதன்கிழமை ஆஜர்படுத்திய போதே அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அட்டாளைச்சேனை 16 ஆம் பிரிவில் திருமணம் முடித்து வசித்து வருகின்ற குறித்த சந்தேக நபர் பதுளை மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவராவார்.

சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின்  பேரில் குறித்த நபரை பொலிஸார் நேற்று செவ்வாய்கிழமை சந்தேகத்தின் பேரில் கைது செய்த அக்கரைப்பற்று பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ஆஜர் படுத்தினர்.
இதன் போதே நீதவான் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .