2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சட்ட விரோத வலைகள், பலநாற்கலன்கள் கைப்பற்றப்பட்டன

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 25 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீகே.றஹ்மத்துல்லா

தடைசெய்யப்பட்ட சட்ட விரோத வலைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த தென் பகுதியைச் சேர்ந்த மூன்று பாரிய பலநாற்கலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று புதன் கிழமை மாலை கடல் பரிசோதகர் தலைமையில் பொலிசார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகள் மீன்பிடி கலங்களிலிருந்து கைப்பற்றப்பட்டன.

ஒலுவில் துறைமுகத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்த தென் பகுதியைச் சேர்ந்த மூன்று மீன்பிடி பலநாற்கலங்களில் கீழ்ப்பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இந்த சட்டவிரோத வலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

சுமார் 21 இலட்சம் ரூபா பெறுமதியான சட்ட விரோத சுருக்குவலைகள் இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கடற்தொழில் பரிசோதகர் எம்.எஸ். மன்சிர் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து அருகிச்செல்வதற்கும் இது காரணமாக அமைகின்றது.

கைப்பற்றப்பட்ட இந்த சட்ட விரோத வலைகளை பயன் படுத்தியவர்கள் எவரும் கைதுசெய்யப்படாததனை அடுத்து கைப்பற்றப்பட்ட பொருட்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .