2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகராசா சரவணன்


திருக்கோவில் வட்டமடு மேச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசத்தில் அத்துமீறி காடுகளை அழித்தல் மற்றும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண்டித்து திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்பாட்டமொன்று இடம்பெற்றது.

கால்நடை அபிவிருத்தி மற்றும் வளர்பாளர்களின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை இந்த ஆர்ப்பட்டம் இடம்பெற்றது.குறித்த பிரதேசத்தில் போலி காணி பத்திரங்களுடன் மேச்சல் தரை பிரதேசத்திற்குள் அத்துமீறி நுழைந்து காடுகளை வெட்டி தீவைத்து நிலங்களை சிலர் அபகரித்துள்ளனர்.

இதனையடுத்து அரசாங்கத்தினால்  கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேச்சல் தரையை அபகரிப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரியே இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றது. இது தொடர்பாக பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருவதாக  பிரதேச செயலாளர் உறுதியளித்தார். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .