2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சட்ட விரோத வலையை வைத்திருந்தவருக்கு அபராதம்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 28 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
 
தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலையை வைத்திருந்த நபரொருவருக்கு தண்டப்பணத்துடன், வலையை பறிமுதல் செய்து அழிக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிவான் ரீ.சரவணராஜா தீர்ப்பளித்தார்.
 
இவர்கள் மூவரில் ஏனைய இருவரும் குற்றத்தை ஏற்றுக் கொள்ளாததனால் தலா ரூபா 50,000 சரீரப்பிணையுடன் விடுதலைசெய்து எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறும் நீதவான் தீர்ப்பளித்தார்.
 
ஒலுவில் துறைமுகத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்த மூன்று பலநாற்கலங்கலில் இருந்து கடந்த புதன்கிழமை (25) கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினால் ரூபா 30 இலட்சம் பெறுமதிமிக்க சட்டவிரோத வலைகள் மீட்கப்பட்டன.
 
சட்டவிரோத வலைகளை வைத்திருந்த மூன்றுபேரையும் கடந்த புதன்கிழமை (25) பொலிஸார் கைது செய்திருந்தனர்.
 
நேற்று வெள்ளிக்கிழமை நீதவான் நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர் படுத்தியபோதே நீதவான் இவ்வாறு தீர்ப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .