2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் குடும்பத் தலைவி பலி

Super User   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாளிகைக்காடு பிரதேசத்தில் நேற்று  திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவியொருவர் உயிரிழந்துள்ளார்.

மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள சந்தையிலிருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பும் வழியில் பின்னால் வந்த முச்சக்கரவண்டியொன்றில் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் அவர் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில நிமிடங்களில் உயிரிழந்தார்.

விபத்து நடந்த இடத்திற்கு வருகை தந்த கல்முனை பொலிஸார் விபத்து நடந்த இடம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்டதனால் தொடர்ந்து சம்மாந்துறை பொலிஸார் முச்சக்கரவண்டி சாரதியைக் கைது செய்து சம்மாந்துறை பொலிஸில் விளக்கமறியலில் வைத்தனர்.

சாய்ந்தமருது 16 ம் பிரிவில் வசித்த அப்துல் கரீம் பசீலத் என்ற 56 வயதான குடும்பத் தலைவியே இவ்வாறு உயிரிழந்தார். இது தொடர்பான மேலதிக விசாரனைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .