2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நீத்தை ஹிளுர் நகர் கிராமத்திற்கு குடிநீர், மின்சார வசதிகள்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை, அக்ரைப்பற்று நீத்தை ஹிளுர் நகர் மீள்குடியேற்றக் கிராமத்திற்கு குடிநீர் வசதியும் மின்சார வசதியும் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹிளுர் நகர் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் முயற்சியால்; இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி ஹிளுர் நகர் மீள்குடியேற்றக் கிராமத்தில் போதியளவான அடிப்படை வசதிகளின்றி பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் 54 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

விவசாயம், பயிர்ச்செய்கை, மிருக வளர்ப்பு போன்ற பிரதான தொழில்களை மேற்கொண்டு தங்களது ஜீவனோபாயத்தை கொண்டுசெல்லும்; இந்த மக்கள் யானைகளின் பிரவேசத்தினால பாதிக்கப்பட்டு வருவதாக  தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.வை.சலீம், பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாஸிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .