2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மது தவிர்ப்பு தினத்தில் மதுபானம், கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

மது தவிர்ப்பு தினமான நேற்று வியாழக்கிழமை கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் உட்பட இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அம்பாறை ஆலையடிவேம்பு, ஒலுவில், அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களிலேயே இவர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து  அக்கரைப்பற்று சாகாம வீதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரை கைதுசெய்ததுடன், இவரிடமிருந்து மதுபானமும் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை, ஒலுவில் சந்தியில் கஞ்சா விற்பனை செய்ததாகக் கூறப்படும் 35 வயதுடைய ஒருவரை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து 6 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .