2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கூட்டுறவுச் சங்கத்திற்கு போட்டோகொப்பி இயந்திரம், கணினி வழங்கிவைப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகராசா சரவணன்


திருக்கோவில், தம்பிலுவில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு போட்டோ கொப்பி இயந்திரமும் கணினியும் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (7) சங்க காரியலயத்தில் நடைபெற்றது.

இதற்கான நிதியினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமத்திரன், நாடாளுமன்ற வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஒரு இலட்;சத்து 50 ஆயிரம் ரூபாவினை வழங்கியிருந்தார்.

சங்கத் தலைவர் நாகமணி கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன், கூட்டுறவு உதவி ஆணையாளர் பதூர்தீன், திருக்கோவில் பிரதேச சபை உப தவிசாளர் கிருஸ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு போட்டோ கொப்பி இயந்திரத்தையும் கணினியையும் வழங்கிவைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .