2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Menaka Mookandi   / 2013 நவம்பர் 22 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று, பனங்காடு - சாகாமம் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை  பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
 
குறித்த வீதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகியே விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது.

இதில், அக்கரைப்பற்று கோளாவில் கோபால்கடை வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய மணியம் கருணாநிதி என்ற இளைஞனே உயிரிழந்தவராவார். விபத்து தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .