2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நெற்செய்கைக் காணிகளுக்கான வடிச்சல் திட்டம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தின் 4,500 ஏக்கர் நெற்செய்கைக் காணிகளுக்கான வடிச்சல் திட்டம்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இந்தக் காணிகளுக்கான வடிச்சல், வாய்க்கால்கள்,  ஆறுகள் இயற்கை அனர்த்தங்களினாலும் சட்டவிரோத நடவடிக்கைகளினாலும் மூடப்பட்டு நிலங்களாக மாற்றப்பட்டு வந்துள்ளன.

இதன் காரணமாக நெற்செய்கைக் காணிகளில் தேங்கி நிற்கும் மேலதிக நீர் வடிந்து செல்வதற்கு தடைகள் ஏற்பட்டு நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளன.

மேற்படி செயற்பாடுகள் காரணமாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைப்புக்களும் விவசாயிகளும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இதனை அடுத்து தற்போது கிழக்கு மாகாண நீர்ப்க்சன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம், சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று வடிச்சல் திட்டத்தினை விரிவாக்கம் செய்யும் பாரிய வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்.

  Comments - 0

  • VALLARASU.COM Sunday, 24 November 2013 02:55 PM

    உண்மையில் இந்த அமைச்சரை பாராட்ட வேண்டும், அந்த ஊரில் சில அரசியல்வாதிகள் வைக்கோல் கந்தில் நாய் போல' இருக்கும் போது அதையும் எதிர்த்து இந்த ஊருக்கு இப்படி சேவை செய்கிறார் என்றால் இவர்தான் உண்மையான படையப்பா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .