2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சம்மாந்துறை படித்தவர்ளை கொண்ட ஊர்: ரவூப் ஹக்கீம்

Kogilavani   / 2013 நவம்பர் 25 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா, எம்.சி.அன்சார்


'சம்மாந்துறைப் பிரதேசத்தின் கல்வித்துறை அடைவுகளில் தற்போது கொஞ்சம் பின்னடைவுகள் இருக்கின்றது என்ற விமர்சனம் இருந்தாலும் சம்மாந்துறை என்ற ஊர் கல்வித்துறையில் பாரியளவு உச்ச நிலைக்கு முன்னேறிய வரலாறுகள் உண்டு. அது சட்டத்துறையை எடுத்துக் கொண்டாலும்சரி, மருத்துவத்துறையை எடுத்துக் கொண்டாலும்சரி, பொறியியல்துறையை எடுத்துக் கொண்டாலும் சரி நல்ல படித்தவர்களைக் கொண்ட ஊர் என்பதை மறைக்கமுடியாது' என சிறிலங்க முஸ்லீம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்ததார்.

சம்பாந்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள், பெற்றோர்கள் எல்லோரும் ஒன்றிணைந்த புரிந்துணர்வுடனான செயற்பாடு தேவையாகும். இதைவிடுத்து எங்கோ ஓர் இடத்தில் ஏற்பட்ட ஒரு இடைவெளியினை வைத்துக்கொண்டு அதனைப்பற்றி குறை கூறிக் கொண்டுதிரிவதை விட்டுவிடவேண்டும்.

நான் அம்பாறை மாவட்டத்தின் பல்கலைக்கழக நுளைவு தொடர்பான ஒரு ஆய்வை மேற்கொண்டிருந்தேன். அவற்றின்படி சராசரியாக அம்பாறை மாவட்டத்தில் 350 முஸ்லிம் மாணவர்களும், 130 தமிழர்களும், 100 சிங்களவர்களும் பல்கலைக்கழகம் செல்கின்றனர். இது எமது விகிதாசாரத்தைவிட கூடுதலானதாகும். இது எமக்கு பல்கலைக்கழக தரப்படுத்தலினால் கிடைத்த வாய்ப்பாகும்.

இதைவிடுத்து எமது அரசியல் கோரிக்கைக்கு காரணமாக அதாவது தனி நிர்வாக மாவட்டம் கோரிக்கைகளின் காரணமாக சில பாதிப்புக்களைக் சந்திக்க நேரிடும். எனவேதான் நாம் இந்த விடயத்தில் நிதானமாக சிந்தித்து சூட்சுமமான முறையில் செயற்பட்டு ஒரே நிர்வாக மாவட்டத்தில் தனியான தமிழ்பேசும் அலகு அல்லது மேலதிக நிர்வாக மாவட்டம் ஒன்றை அடைந்து கொள்வதற்கான நடைமுறைகளை கையாழ்வதாக' தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினரும் சிரேஷ;ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம்.முஸ்தபா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.அப்துல் றஹீம், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர், மாகாண அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சஹூபிர் உட்பட அதிபர்கள்,கல்விமான்கள் பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .