2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

Kogilavani   / 2013 நவம்பர் 25 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளராக 6ஆவது தடவையாகவும் தேசமான்ய யூ.எல்.எம்.பௌஸர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவராக எம்.இஸட்.எம்.பாறூக், பொருளாளராக ரி.குணநாதன், பத்திராதிபராக தீரன்.ஆர்.எம்.நௌஸாட், உதவி தலைவர்களாக வை.பண்டார, கே.எம்.காரியப்பர் ஆகியோர்களும், பிரதி பொதுச் செயலாளராக எஸ்எல்.ஹாலித், உதவி செயலாளர்களாக எம்.எம்.ஜூனைட், எம்.எம்.ஏ.முபாறக், ஆகியோர்களும், உதவி பொருளாளராக ஏ.எம்.அமீர், உதவி பத்திராதிபராக யூ.எச்.ஜெயந்த, நிர்வாக குழு உறுப்பினர்களாக எம்.திலகேஸ்வரி, எம்.ஜே.எம்.சல்மான், ஐ.சுசீலா, ஐ.றிம்லான், எம்.ஐ.சலீம், எம்.ஆர்.எம்.றமீஸ், எம்.எஸ்.எம்.ஏ.மலிக், கே.எல்.சஜீயா, எம்.எஸ்.எம்.ஹனீபா ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர் சங்கத்தின் 6ஆவது வருடாந்த பொதுக் கூட்டமும், 2013ஃ2014 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று (24) மாளிகைக்காடு பிஸ்மில்லா ரெஸ்ருரண்ட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற போதே இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .