2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வாழை இனம் மூடியுள்ளதனால் நன்னீர் மீன்பிடி பாதிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 26 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிறு முகத்துவாரத்தின் களப்பு பிரதேசத்தில் ஆற்று வாழை இனம் மூடியுள்ளதனால் நன்னீர் மீன்பிடிப்பாளர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

அக்கரைப்பற்று- பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள சிறு முகத்துவாரத்தின் களப்பு பிரதேசத்தில் நாளாந்தம் அதிகளவிலான நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் இத்தொழில் மூலம் தமது ஜீவனோபாத்தை பெற்று வந்திருந்தனர்.

தற்போது இங்கு அதிகளவிலான ஆற்று வாழை இனங்கள் மீன்பிடி பிரதேசத்தை மூடி உள்ளதனால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன் இதனால் குறைந்தளவிலான வருமானத்தையே பெற்றுவருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நன்னீர் மீன்பிடியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .